எமது பாடசாலை, 1938.01.03இல் தற்போது அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி என அழைக்கப்படும்.தேசிய பாடசாலை தெற்கு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையாக இருந்தபோது பெண்களுக்கான மாலை நேரப் பாடசாலையாகத் தோற்றம் பெற்றது. அக்காலத்தில் தெற்கு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் காணப்பட்ட வளப்பற்றாக்குறை, பெண்களுக்கான தனித்துவமான பாடசாலையின் அவசியம் முதலியவை காரணமாக, அங்கு காலை வேளைகளில் ஆண்களுக்கும், மாலைவேளையில் பெண்களுக்குமான இரு பாடசாலைகளாக உருவாக்கப்பட்ட போதிலும் 1941 வரை ஒரே அதிபர் தலைமையில் ஒரே நிருவாகத்தில் இயங்கியது.அக்காலத்தில் இரு பாடசாலைகளுக்கும்
திருமதி கே. கணபதிப்பிள்ளை அதிபராகக் கடமையாற்றினார்.
1941இல் பெண் பாடசாலை தனியாக்கப்பட்டு அட்டாளைச்சேனை அரசினர் பெண்கள் பாடசாலை எனப் பெயர் சூட்டப்பட்டு தனியான நிர்வாகத்தின் கீழ் அதே பாடசாலை வளவில் தனித்துவமாக இயங்கத் தொடங்கியது. இதன் முதல் அதிபராக திருமதி எம். கந்தையா என்பவர் கடமையாற்றினார். ஆரம்பத்தில் அதிபருடன் மட்டும் இயங்கிய இப்பாடசாலைக்கு 1942 இல் உதவி ஆசிரியை ஒருவர் நியமனம் செய்யப்பட்டார்.
இலங்கை சுதந்திரம் பெற்று சில நாட்களின் பின் 16.02.1948 இல் இப்பாடசாலை தற்போது பாடசாலை அமைந்துள்ள இரண்டாம் குறிச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பெண்கள் பாடசாலையாக தொடர்ந்தும் இயங்கியது. இப்பாடசாலையில் கற்கும் மாணவிகளின் தொகை மிகக் குறைவாக இருந்தமையாலும் இச்சுற்றாடலில் வாழும் சிறு ஆண் பிள்ளைகள் மிக நீண்டதூரம் சென்று வேறு பாடசாலையில் கற்க வேண்டிய நிலை இருந்ததினாலும் இப்பாடசாலையின் அபிவிருத்தி நோக்கம் கருதி இதனை கலவன் பாடசாலையாக மாற்ற வேண்டும் என்னும் வேண்டுகோள் கல்விமான்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் ஆகியோரினால் முன்வைக்கப்பட்டமையினால் 01.01.1959 முதல் கலவன் பாடசாலையாக மாற்றப்பட்டு “அட்டாளைச்சேனை இரண்டாம் குறிச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன் ஆண் பிள்ளைகளும் இதில் அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக இக்காலம் முதல் இப்பாடசாலை மாணவர் தொகையில் திடீர் அதிகரிப்பைக் காணக் கூடியதாக உள்ளது.
இப்பாடசாலையின் முதல் முஸ்லிம் அதிபரான அல்ஹாஜ். 814. உமறலியார் ஆலிம் அவர்கள் இப்பாடசாலையில் அதிபராக இருந்த காலத்தில் இப்பாடசாலையின் பெயர் அல் முனீறா வித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. காலப்போக்கில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பெண்கள் கல்வி கற்கும் வீதம் மிகக் குறைவாக இருந்தமையினாலும் இப்பிரதேசத்திலுள்ள முக்கிய ஊர்களில் எல்லாம்பெண்களுக்கான தனிப்பாடசாலைகள் உருவாக்கப்பட்டமையினாலும் ஏற்கனவே பெண்கள் பாடசாலையாக இருந்த இப்பாடசாலையை மீண்டும் பெண்கள் பாடசாலையாக மாற்ற வேண்டும் என்றும் இதுவரை காலமும் ஆரம்பப் பாடசாலையாக இருந்து வரும் இப்பாடசாலை பெண்களுக்கான உயர் கல்வி பெறும் பாடசாலையாக வளர்க்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை சமூகத்தின் பல்வேறு தரப்பிலிருந்தும் விடுக்கப்பட்டமையினால் பெண்கள் பாடசாலையாக மாற்றும் நடவடிக்கை அல்ஹாஜ் 14. அப்துல் ஹையி அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக 1986ஆம் ஆண்டு முதல் இப்பாடசாலையில் ஆண்பிள்ளைகள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டதுடன் இங்கு கற்கும் ஆண் மாணவர்கள் 5ஆம் ஆண்டு சித்தியடைந்ததும் வேறு பாடசாலைகளுக்கு அனுமதிக்காக அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இப்பாடசாலை இடைநிலைப் பாடசாலையாக மாற்றப்பட்டு உயர் வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டன.
1990இல் இப்பாடசாலையில் கல்வி கற்ற இறுதித்தொகுதி ஆண் மாணவர்கள் 5ஆம் தரம் சித்தியடைந்து வெளியேற இப்பாடசாலை அப்போது முழுமையான பெண் பாடசாலையாகவும் 9ஆம் ஆண்டு வரை வகுப்புகளிலுள்ள பாடசாலையாகவும் காணப்பட்டது. இம்மாணவிகள் தொடர்ந்து கற்று 1992இல் க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றினர். 1998இல் இப்பாடசாலையில் க.பொ.த உயர்தர வகுப்பு வைப்பதற்று வடக்கு - கிழக்கு மாகாண அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட மையினால் இதன் பெயர் அல் முனீறா பெண்கள் மகா வித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2001இல் நடைபெற்ற வருடாந்த பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பொதுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட் தீர்மானத்துக்கமைவாக இப்பாடசாலையின் பெயர் அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலை (AL Muneera Girls' High School) என மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 01.05.2012 இல் க.பொ.த (௨,த) விஞ்ஞான, கணித பிரிவிற்கான அனுமதி கிடைத்ததால் இப்பாடசாலை 188 பாடசாலையாக தரம் பெற்றது. 2015இல் முதல் தடவையாக க.பொ. த (உ)த)ப் பரீட்சைக்கு மாணவியர் தோற்றினர். இவ்விஞ்ஞான பிரிவில் இருந்து 2016இல் விவசாய விஞ்ஞானத் துறைக்கும், 2017இல் பல் வைத்தியத் துறைக்கும் 2021இல் இரு மாணவிகள் வைத்தியத் துறைக்கும் பல்கலைக் கழகம் சென்றுள்ளனர்.





